கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில், விஷச்சாராயம் குடித்து உயிரிழந்த 21 பேர்களின் சடலங்களை ஒரே இடத்தில் வைத்து எரிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. ஆனால், கனமழை பெய்த காரணத்தால் சடலங்களை எரிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. தொடர்ந்து, மழை நின்றவுடன் சடலங்கள் ஒவ்வென்றாக எரிக்கப்பட்டன.

தொடர்ந்து, பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில் அரசியல் கட்சியினர் நேரில் சென்று பலியானவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர். அந்தவகையில் கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் குடித்து கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார் விஜய்.