
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று முன் தினம் சட்டவிரோதமாக கள்ளச்சாராய விற்பனை நடைபெற்ற நிலையில் அதை குடித்தவர்களுக்கு கண் எரிச்சல், வயிற்று வலி போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த கள்ளச்சாராயத்தை குடித்ததில் 29 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெரும் பலரின் நிலைமை மோசமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இது தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் விஷச்சாராயம் குடித்து பலியான விவகாரம் தொடர்பாக இன்று காலை முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற இருக்கிறது. அதன்படி சட்டப்பேரவையில் அலுவல் கூட்டம் முடிந்த பிறகு தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறும். மேலும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள் முத்துசாமி, எ.வ.வேலு, பொன்முடி மற்றும் காவல்துறை டிஜிபி, உளவுத்துறை டிஜிபி மற்றும் உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொள்கிறார்கள்.