கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது. சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கள்ளக்குறிச்சி கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த ஜான் பாட்ஷா என்பவர் இன்று உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 60-ஐ எட்டியுள்ளது.

தற்போது 152 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் 10 பேருக்கு கண்பார்வை குறைபாடு உள்ளது. அதே போல, கள்ளக்குறிச்சியில் 111, விழுப்புரத்தில் 4, புதுச்சேரி ஜிப்மரில் 11, சேலத்தில் 29 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள்.