கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து 39 பேர் பலியான விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அரசியல் கட்சியினர் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் விஷச்சாராயத்தால் உயிரிழந்த ஒரு குடும்பத்திற்கு மாதம் ரூ.5000 அதிமுக சார்பாக வழங்கப்படும் என்று எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் நேரில் சந்தித்து பேசிய அவர், தாய், தந்தையை இழந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த குழந்தைகளின் கல்விச் செலவை அதிமுகவே ஏற்கும் என்று கூறினார். மேலும், அடுத்த 10 வருடங்களுக்கு அவர்களுக்கு அதிமுக மாதம் 5000 ரூபாய் வழங்கும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.