
தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் குடித்து 51 பேர் பலியான விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில் திமுக அரசுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனங்களை தெரிவித்து வருகிறது. அதோடு திரை உலக பிரபலங்கள் பலரும் தமிழக அரசை விமர்சிக்கிறார்கள். குறிப்பாக நடிகர் விஜய், நடிகர் சூர்யா, ஜிவி பிரகாஷ் குமார், பா. ரஞ்சித் போன்ற பல்வேறு பிரபலங்கள் தமிழக அரசுக்கு கள்ளச்சாராய விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி கண்டனங்களை தெரிவித்துள்ளனர். அந்த வகையில் தற்போது நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் ஒரு எக்ஸ் பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில் கள்ளச்சாவு…க்கு எதுக்கு நல்ல சாவு (ரூ.10 லட்சம்) என்று பதிவிட்டுள்ளார். அதாவது கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ள நிலையில் தற்போது கள்ளசாவுக்கு எதுக்கு ரூ.10,00,000 நிவாரணம் என கேட்கும் விதமாக நடிகர் பார்த்திபன் பதிவிட்டுள்ளது சமூக வலைதளத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் இதற்கு பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.