டெல்லியில் ஓம்கார் (24) என்ற வாலிபர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் சம்பவ நாளில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது 3 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்துள்ளனர். அதன் பிறகு அவரை அந்த கும்பல் தாக்கியதோடு கத்தியால் முகத்தை கிழித்து சிதைத்துள்ளனர்.  அந்த வாலிபர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையின் போது நேற்று விகாஷ் என்ற வாலிபர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் தான் உட்பட 3 பேர் சேர்ந்து வாலிபரின் முகத்தை சிதைத்ததை ஒப்புக்கொண்டனர்.

அதாவது ஓம்கார் தன்னுடன் பணிபுரிந்த 30 வயது இளம்பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். தன்னைவிட வயது மூப்பு என்றாலும் கடந்த 3 வருடங்களாக இருவரும் காதலித்ததுடன் நெருக்கமாக பழகி வந்துள்ளனர். இந்நிலையில் ஓம்கார் திடீரென காதலியை திடீரென காதலை கைவிட்டவுடன் வேறொரு பெண்ணுடன் திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். இந்த திருமண நிச்சயதார்த்தத்தை நிறுத்துமாறு அந்தப் பெண் கூறியுள்ளார். அப்போது இருவரும் உல்லாசமாக இருந்த புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டு விடுவதாக  ஓம்கார் மிரட்டியுள்ளார். இதனால் அந்த பெண் ரூ.30,000 பணம் கொடுத்து ஓம்கார் முகத்தை சிதைக்குமாறு ஆசிட் கொடுத்து அனுப்பியுள்ளார். ஆனால் அவர்களால் ஆசிட் வீச முடியாததால் கத்தியால் முகத்தை சிதைத்துள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்தது. மேலும் இதைத் தொடர்ந்து இளம்பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.