தேனி மாவட்டத்தில் உள்ள மேல சொக்கநாதபுரம் பகுதியில் அரசு இன்ஜினியரிங் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அண்ணா நகரை சேர்ந்த விக்னேஷ்(31) என்பவர் எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு விடுதியில் இருக்கும் கழிப்பறைக்கு சென்ற விக்னேஷ் நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை. இதனால் மாணவர்கள் விடுதி காப்பாளர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

அப்போது ரத்த வெள்ளத்தில் விக்னேஷ் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விக்னேஷின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் விக்னேஷின் தந்தை தனது மகன் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், அவரை யாராவது கொலை செய்திருக்கலாம் எனவும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.