
10 ரூபாய் நாணயம் குறித்து தற்போது RBI மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 2009 ஆம் ஆண்டு RBI 10 ரூபாய் நாணயத்தை அறிமுகப்படுத்தியது. இந்த நாணயத்தில் ‘ஒற்றுமை வேறுபாடு’ மற்றும் ‘இணைப்பு மற்றும் தகவல் தொழில்நுட்பம்’ என்ற எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தன. இந்த 10 ரூபாய் நாணயத்தை பல்வேறு வடிவங்களில் வெளியிட்டு வருவதால் மக்கள் அதை பயன்படுத்த அஞ்சுகின்றனர்.
இதனால் RBI 10 ரூபாய் நாணயத்தை எந்த இடத்திலும் பயன்படுத்தலாம் என்ற அறிக்கை வெளியிட்டனர். இருப்பினும் இந்த நாணயத்தை ஒரு சில மாவட்டங்களில் உள்ள கடைகள், பேருந்துகள் மற்றும் வங்கிகள் போன்ற இடங்களில் வாங்கப்படுவதில்லை. இதனால் RBI தற்போது வங்கி ஊழியர்கள் வாடிக்கையாளர்களிடம் இருந்து 10 ரூபாய் நாணயத்தை மறுக்காமல் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் இதுகுறித்த அறிவிப்பை அனைத்து வங்கிகளிலும் நோட்டீஸ் போன்றவற்றை மூலம் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் எனவும் RBI கூறியுள்ளது. மீண்டும் நாணயத்தை பெற மறுக்கும் நபர்களைப் பற்றி புகார் தெரிவிக்கலாம் எனவும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க படும் எனவும் RBI தெரிவித்துள்ளனர்.