நம் உடலில் உருவாகி, கொஞ்சம் கொஞ்சமாக நம்மை அழிக்கும் நோய்களுள் புற்று நோயும் ஒன்று. இதில் எட்டில் ஒரு பெண்களுக்கு மார்பக புற்றுநோய் உறுதி செய்யப்படுகிறது. இது வந்து விட்டாலே இறப்பு உறுதிதான் என்ற நிலை மாறி, இதற்காக பல தொழில்நுட்பங்கள்  கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மார்பக புற்று நோயை முன்பாகவே கண்டறியும் ஏ.ஐ  கண்டுபிடித்துள்ளது.

அவற்றை அமெரிக்காவில் உள்ள மாசாசூசெட்ஸ் பல்கலைக்கழகமும், ஜமீல் கிளினிக்கும் இணைந்து கண்டுபிடித்தது. இதற்கு “மீராய்” என்று பெயரிடப்பட்டுள்ளது. இது அமெரிக்காவில் உள்ள பல மருத்துவமனைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து மருத்துவர்கள் கூறியதாவது, இதை பயன்படுத்தி 5 ஆண்டுகளுக்கு முன்பே மார்பகம் புற்றுநோயை கண்டறிய முடியும் என்று கூறியுள்ளனர்.

இதுக்குறித்து ரேடியோலாஜிக்கல் சொசைட்டிஆப் நார்த் அமெரிக்கா சமீபத்தில் ஆய்வில் கூறியதாவது, மெமோகிராம் மூலம் மார்பக புற்றுநோயை கண்டறிய முடியும். ஆனால் சில நேரங்களில் அவற்றைக் கொண்டு மருத்துவர்களால் முன்கூட்டியே கண்டறிய முடியவில்லை. இந்த ஏஐ மூலம் ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை அளிக்க முடியும் என்று ஆய்வில் வெளியிடப்பட்டுள்ளது.