தமிழ் இலக்கிய ஆராய்ச்சியாளர்களில் ஒருவர் குமார சுப்பிரமணியன். இவர் சிறந்த எழுத்தாளர் மற்றும் கவிஞர் ஆவார். திருநெல்வேலியைச் சேர்ந்த குமார சுப்பிரமணியன் திமுக கட்சியின் இலக்கிய அணி தலைவராக பொறுப்பு வகித்துள்ளார். இவர் திராவிட இயக்கத்தின் கொள்கைகளை கவிதை வடிவில் பொதுமக்களிடம் கொண்டு சேர்த்தவர்.

இவருக்கு தற்போது 88 வயது ஆகும் நிலையில் உடல்நல குறைவு மற்றும் வயது மூப்பின் காரணமாக காலமானார். இவருடைய மறைவுக்கு தற்போது முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் திராவிட இயக்கத்தின் கொள்கைகளை கவிதை வடிவில் கொண்டு சேர்த்ததில் இவருடைய பங்கு அளப்பரியது என்று புகழாரம் சூட்டியுள்ளார்.