
டாடா படத்தின் மூலமாக ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தவர் கவின். இவர் முன்னதாக பிக் பாஸ் மூலமாகவும் பிரபலமானார் இந்நிலையில் இவரோடு இணைந்து நடிப்பதற்கு இரண்டு இளம் ஹீரோயின்கள் போட்டி போட்டு வலை வீசி வருகிறார்களாம். அதில் ஒருவர் தற்போது இளைஞர்களின் கனவு கனியாக வளம் வருபவர் இவானா. தற்போது ஹரிஷ் கல்யாண் நடிக்கும் எல் ஜி எம், கள்வன் காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் இவானா தெலுங்கில் அறிமுகமாக உள்ளார் .தமிழில் தனக்கான ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என்று ஆசையில் இருக்கும் இந்த நடிகை அதற்காக தேர்ந்தெடுத்து இருக்கும் ஹீரோதான் கவின். எப்படியாவது இவரோடு ஒரு படத்தில் ஜோடி சேர்ந்து விட வேண்டும் என்று பிளான் போட்ட இவானா அதற்கான வேலைகளில் மும்முரமாக இருக்கிறார்.
அதேபோல பேச்சிலர் படத்தின் மூலம் அறிமுகமான திவ்யா பாரதியும் கவினோடு இணைய தூண்டில் போட்டு வருகிறாராம். அதுமட்டுமல்லாமல் வளர்ந்து வரும் சில நடிகைகளும் இவரோடு சேர்ந்து நடிக்க ஆர்வம் காட்டி வருகிறாராம். இப்படி இளம் நாயகிகள் இன்றைய நாயகனாக கவின் மாறி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.