
சென்னையில் அமைச்சர் சேகர் மற்றும் மேயர் பிரியா ஆகியோர் ஆய்வில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு மூதாட்டி அமைச்சர் சேகர்பாபுவிடம் வந்து பேசினார். அவரிடம் ஏதாவது உதவி வேண்டுமா? என அமைச்சர் கேட்க அதற்கு மூதாட்டி நான் ரொம்ப கஷ்டப்படுகிறேன். இங்குள்ள ஒரு ஹோட்டலில் பாத்திரம் கழுவும் வேலைக்கு போகிறேன் என்று கூறினார். அதற்கு 75 வயதில் எதற்காக வேலைக்கு போறீங்க சந்தோஷமா இருக்க வேண்டிதானே என அமைச்சர் கூறியதோடு காதில் போட்டு இருக்கும் தங்கம் மூக்குத்தி எல்லாம் தங்கமா என கேட்டார்.
அதற்கு மூதாட்டி இதெல்லாம் கவரிங் என்று கூற தன்னுடைய உதவியாளரிடம் குறித்து வைத்துக் கொள்ளுங்கள் என்று அமைச்சர் கூறிவிட்டு சென்றார். இந்நிலையில் மூதாட்டிக்கு அமைச்சர் தங்க கம்மல் வாங்கி காதில் போட்டுள்ளார். ஒரு கம்மலை அமைச்சர் போட மற்றொரு கம்மலை மேயர் பிரியா போட்டுவிட்டார். இதனால் சந்தோஷப்பட்ட மூதாட்டி அமைச்சருக்கு நன்றி சொன்னார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.