
டைரக்டர் வெங்கட் பிரபு இப்போது இயக்கியுள்ள “கஸ்டடி” படத்தில் நாக சைதன்யா கதாநாயகனாக நடிக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் இப்படத்தில் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். இத்திரைப்படத்தில் வில்லனாக அரவிந்த் சாமி நடிக்கிறார். இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜா ஆகிய இருவரும் இணைந்து இப்படத்திற்கு இசையமைக்கின்றனர்.
அதோடு இப்படத்தில் சரத்குமார், வென்னேலா கிஷோர், பிரேம்ஜி, சம்பத் ராஜ், பிரியாமணி மற்றும் பிரேமி விஷ்வநாத் போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படம் வரும் மே 12-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் கஸ்டடி திரைப்படத்தின் சூட்டிங் நிறைவடைந்ததை வீடியோ மூலம் படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அந்த வீடியோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
That was on hellava ride brother!! Cant wait to show what we have done to ur fans and our audience!!! #excited #CustodyOnMay12 https://t.co/FoTgg8zNOZ
— venkat prabhu (@vp_offl) February 24, 2023