
தமிழில் பழனி, நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி, ஜில்லா, மாரி, கோமாளி உட்பட பல்வேறு படங்களில் நடித்து பிரபலமானவர் காஜல் அகர்வால். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி மொழி படங்களிலும் நடித்து உள்ளார். அண்மையில் இவரது நடிப்பில் ரிலீஸ் ஆன கோஸ்டி திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.
இப்போது ஷங்கர் டைரக்டில் கமல் நடிப்பில் உருவாகும் இந்தியன்-2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் காஜல் அகர்வால் பிறந்தநாளை முன்னிட்டு தன் சமூகவலைத்தளத்தில் வீடியோ ஒன்று வெளியிட்டு உள்ளார். அதில், காஃபி கப்பில் அவர் எகிரி குதித்து குளிப்பது போல் இடம்பெற்றிருக்கும். அந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Diving into this day with Conviction, Love and coffee…… loads of coffee , no, loads of love 🫶🏻😋☕ pic.twitter.com/xUCVc2wRvO
— Kajal Aggarwal (@MsKajalAggarwal) June 19, 2023