
கேரளாவில் பறவை காய்ச்சல் என்பது அடிக்கடி பரவி வரும் நிலையில் கோழிகள், வாழ்த்துக்கள் ஆகியவற்றின் மூலம் தான் பரவுவதாக கூறப்படுகிறது. இந்தப் பறவை காய்ச்சல் பாதிப்பினால் இதுவரை 50,000 மேற்பட்ட பறவைகள் அழிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நிபுணர்கள் ஆய்வு செய்து வரும் நிலையில் தற்போது முதல் முறையாக காகங்களுக்கும் பறவை காய்ச்சல் பரவி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதன் காரணமாக கொத்து கொத்தாக காகங்கள் செத்து மடிந்துள்ளது. இந்த பறவைக்காய்ச்சல் ஆலப்புழா மாவட்டத்திலுள்ள முகம்மா கிராமத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இது அந்த கிராம மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் உயிரிழந்த காகங்களின் உடலை ஆய்வுக்கு அனுப்பி வைத்த நிலையில் பறவை காய்ச்சல் இருப்பது உறுதியாகியுள்ளது.