
ஆந்திர மாநிலத்தில் நடிகர் பவன் கல்யாண் தெலுங்கு தேசம் மற்றும் பாஜக கூட்டணியில் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக அவருடைய அண்ணனும், நடிகருமான சிரஞ்சீவி மற்றும் குடும்பத்தினர்கள் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் நடிகர் பவன் கல்யாண் உறவினரான நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் அவருடைய மனைவி காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக வாக்கு கேட்பது போன்ற வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் இது போலி வீடியோ என்பது தெரியவந்துள்ளது. அதாவது கடந்த 2022 ஆம் ஆண்டு நியூயார்க்கில் நடந்த இந்திய தின அணிவகுப்பில் நடிகர் அல்லு அர்ஜுன் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட வீடியோவை தான் தற்போது காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பது போன்று வெளியிட்டுள்ளனர். மேலும் இந்த போலி வீடியோவை யாரும் நம்ப வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.