
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி உடல்நல குறைவின் காரணமாக டெல்லியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் நேற்று காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் வயிறு சம்பந்தமான உபாதை காரணமாக உடல் நல குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
தற்போது அவருடைய உடல்நிலை சீராக இருப்பதாக கூறப்படும் நிலையில் தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் இருக்கிறார். மேலும் சோனியா காந்திக்கு தற்போது 78 வயது ஆகும் நிலையில் டெல்லியில் உள்ள சர் கங்காராம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளார் என்று கூறப்படுகிறது.