தொகை வழங்கும் விழா சென்னையில் கோலாகலமாக தொடங்கியது. விழா நடக்கும் தொகுதி வாரியாக மாணவர்களுக்கு ஊக்கத் இடத்துக்கு வருகை தந்த விஜய்யை ரசிகர்கள் சூழ்ந்து வரவேற்பு அளித்தனர். அவர் வீட்டில் இருந்து புறப்பட்டதில் இருந்தே ரசிகர்கள் வெள்ளம் அவரை திக்குமுக்காட வைத்துவிட்டது. காரில் இருந்து இறங்கி விழா மேடைக்கு வருவதற்குள் ரசிகர்கள் படை அவரை திணறடித்துவிட்டனர்.

விழாவில் பேசிய விஜய்,”அம்பேத்கர், பெரியார், காமராஜரை தெரிந்துக் கொள்ளுங்கள். நீங்கள்தான் நாளைய வாக்காளர்கள், அடுத்தடுத்து புதிய தலைவர்களை நீங்கள்தான் தேர்ந்தெடுக்கப்போகிறீர்கள். நம் விரலை வைத்து நம் கண்ணையே குத்துகிறார்கள். காசு வாங்கி வாக்களிப்பது குறித்து கூறுகிறேன். இதை தடுத்து நிறுத்துங்கள். அடுத்த தலைமுறை வாக்காளர்களான நீங்கள் நினைத்தால் அது முடியும்” என கூறினார்