தமிழ் திரையுலகில் நடிப்பு, நடனம், இயக்கம் என பன்முக திறமைகளை கொண்டவர் ராகவா லாரன்ஸ். இவரது நடிப்பில் 2011 ஆம் ஆண்டு வெளியான காஞ்சனா திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. அதன் பிறகு 2015 ஆம் வருடம் காஞ்சனா 2 படமும் 2019 ஆம் வருடம் காஞ்சனா 3 படமும் வெளியானது.

இந்நிலையில் காஞ்சனா 4 படம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. காஞ்சனா 4 படத்தில் ராகவா லாரன்ஸும் பூஜா ஹெக்டேவும் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 23ஆம் தேதியே தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவின் நோரா படேகி தமிழில் அறிமுகமாகிறார்.