திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே வனப்பகுதியில் எரிந்த நிலையில் பெண் சடலம் மீட்கப்பட்டுள்ளது.  அமைதிசோலை என்ற இடத்தின் அருகே 60 அடி பள்ளத்தில் ஆதிமூலம் நீரோடை அருகே பெண்ணின் சடலம் எரிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

கால்நடை மேய்ச்சலுக்கு சென்றவர்கள் கன்னிவாடி காவல் துறையினருக்கு தகவல் அளித்த நிலையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார்  இறந்த பெண் யார்? கொலை செய்யப்பட்டாரா? தற்கொலை முயற்சியா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.