திண்டுக்கல்-திருச்சி சாலையில் குருவிகுளம் வனப்பகுதியில் ஒரு நபரின் சடலம் கிடந்தது. அவரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த நபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் சடலமாக கிடந்த நபர் காளானம்பட்டியைச் சேர்ந்த நாச்சிமுத்து என்பது தெரியவந்தது. அவருக்கு காளியம்மாள் என்ற மனைவி உள்ளார். காளியம்மன் கூலி வேலை பார்க்கிறார். இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கின்றனர்.

காளியம்மாளுக்கும் மாங்கரை நடுபட்டியைச் சேர்ந்த பிரபாகரனுக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இதனை அறிந்த நாச்சிமுத்து தனது மனைவியை கண்டித்துள்ளார். இதனால் காளியம்மாள் கள்ளக்காதலனுடன் இணைந்து தனது கணவரை கொலை செய்ய திட்டமிட்டார். சம்பவம் நடந்த அன்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உறவினரை பார்ப்பதற்காக கணவன் மனைவி இருவரும் சென்றனர். அந்த சமயம் மது அருந்தலாம் என கூறி கிருபாகரன் நாச்சிமுத்துவை காட்டு பகுதிக்கு அழைத்து சென்று மது குடிக்க வைத்தார். பின்னர் ஒரு கட்டையை நாச்சிமுத்துவின் தலையில் போட்டு கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியது தெரியவந்தது. இதனால் கிருபாகரனையும், காளியம்மாளையும் போலீசார் கைது செய்தனர்.