கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் ஷாஜி (43) என்பவர் வசித்து வந்தார். இவர் திருவனந்தபுரம் மாநகராட்சியில் ஆடிட்டராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி அதே பகுதியிலுள்ள ஒரு அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். ஷாஜி தினமும் வேலைக்கு செல்வதற்கு முன்பு அவரது மனைவியை பள்ளியில் விட்டு செல்வது வழக்கமாக வைத்திருந்தார். அதன்பின் மாலையில் பள்ளி முடிந்தவுடன் அவரை வீட்டிற்கு அழைத்து செல்வதும் வழக்கமாக இருந்தது.

இந்நிலையில் சம்பவநாளன்று ஷாஜி தனது மனைவியை பள்ளிக்கு அழைத்து சென்றுள்ளார், அதன்பின் மாலை நேரத்தில் அவரது மனைவியை பள்ளியிலிருந்து அழைக்க அவர் வரவில்லை. இதனால் அவர் தன்னுடைய கணவருக்கு செல்போனில் தொடர்பு கொண்டார். ஆனால் அவரது செல்ஃபோன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருந்தது. இதனையடுத்து ஷாஜியின் மனைவி காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து ஷாஜியை தேடினர். அப்போது அவருடைய கார் ஆனப்பாறை எனும் பகுதியில் நிற்பது தெரியவந்தது.

பின்னர் காவல்துறையினர் அங்கு சென்று பார்த்தபோது அவர் தன்னுடைய  கள்ளக்காதலி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் ஷாஜியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன்பின் காவல்துறையினர் ஷாஜியின் சக ஊழியர்களிடம் விசாரித்தபோது அவர் கள்ளக்காதலிக்கு கடன் வாங்கி கொடுத்ததும், அந்தக் கடனை திரும்ப செலுத்தாததால் வங்கியிலிருந்து அவருக்கு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டதையும் கூறினர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.