
மலேசியாவில் உள்ள தாவோ பகுதியில் 60 வயதான அடி பங்சா என்பவர் திடீரென மாயமாகி உள்ளார். அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் காவல்துறையினரிடமும் புகார் கொடுக்கப்பட்டது. ஆனாலும் அவர் எப்படி காணாமல் போனார் என்பது யாருக்கும் தெரியவில்லை. இந்நிலையில் அப்பகுதியில் முதலை ஒன்று சுற்றித் திரிந்துள்ளது.
அந்த முதலையின் வயிறும் பெரியதாக இருந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அடி பங்சாவின் உறவினர்கள் வனத்துறையினரிடம் தெரிவித்துள்ளனர். இதை அடுத்து முதலை சுட்டுக் கொல்லப்பட்டு அதன் வயிற்றை வெட்டி பார்த்தபோது உள்ளே காணாமல் போன அடி பங்சாவின் சடலம் துண்டு துண்டாக இருந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.