உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் சுலேமான். இவருடைய 2 வயது மகளை நேற்று முன்தினம் காலையிலிருந்து  காணவில்லை  என்று  காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து காவல்துறையாயினர் குழந்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து அக்கம்பக்கத்தில் விசாரித்ததில் அவருடைய 2 குழந்தைகள் இதற்கு முன்பு காணாமல் போனது  தெரியவந்தது.

இதனால் சுலேமானை பிடித்து விசாரித்ததில் அவர் தன்னுடைய  குழந்தையை கால்வாயில் தூக்கி வீசியதாக கூறியுள்ளார். வீட்டில் 2 வயது பெண் குழந்தையும், அவளது சகோதரனும் சண்டை போட்டதால்  கோபத்தில்  இவ்வாறு செய்ததாக கூறி உள்ளார். இதையடுத்து அவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.