உலக சாதனைக்காக திருச்செந்தூர் கடற்கரையில் 800 மாணவிகள் முருகன் வேடமடைந்து பரதநாட்டியம் ஆடி அசத்தினர்.

திருச்சி சிவசக்தி அகாடமி சார்பில் பைரவர் கோவில் கடற்கரையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. திருச்செந்தூர் கடல் அலை ஓசையில் கலை அர்ப்பணம் என்ற பெயரில் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த பரதநாட்டிய நிகழ்ச்சியில் ஐந்து வயது முதல் 20 வயது வரை உள்ள சுமார் 800 மாணவிகள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் மாணவிகள் முருகன் வேடமணிந்து கைகளில் வேல் ஏந்தியும் காவடியை சுமந்தும் 17 நிமிடம் பரதநாட்டியம் ஆடி சாதனை படைத்தனர். தொடர்ந்து மாணவிகளுக்கு ஆசியா பசுபிக் ரெக்கார்ட் மற்றும் ரெக்கார்ட் ஆப் இந்தியா நிறுவனத்தினர் சாதனைக்கான சான்றிதழ்கள் பதக்கம் மற்றும் விருதுகளை வழங்கியுள்ளனர்.