உத்திரபிரதேச மாநிலத்தில் ராஜா கி மண்டி ரயில்வே நிலையம் அமைந்துள்ளது. இங்கு ராணி (38) என்ற பெண் ரயிலில் அடிபட்டு உயிரிழந்துள்ளார். இது தொடர்பான சிசிடிவி கேமரா காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கடந்த சனிக்கிழமை ராணியும் அவருடைய லிவிங் பார்ட்டரான கிஷோரும் அங்கு சென்றுள்ளனர். இதில் கிஷோர் குடி போதைக்கு அடிமையாகியுள்ளார். இதனால் ராணி மற்றும் கிஷோருக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இவர்கள் இருவரும் நடைமேடையில் உட்கார்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் திடீரென ராணி தன் காதலனை பயன்படுத்துவதற்காக ரயில் தண்டவாளத்தில் இறங்கியுள்ளார். அப்போது எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று வந்தது. உடனே ராணி மேலே ஏற முயற்சி செய்தார். ஆனால் கண்ணிமைக்கும் நேரத்தில் ரயில் அவர் மீது ஏறியது. இதில் ராணி சம்பவ இடத்திலேயே துடி துடித்து பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக ரயில்வே காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.