தமிழ் திரை உலகின் முன்னணி நடன இயக்குனர் சதீஷ். இவர் முதல் முறையாக இயக்குனராக அறிமுகமாகும் படம் kiss. டாடா மற்றும் பிளடி பெக்கர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கவின் இந்த படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். இந்த படத்தில் அயோத்தி பட நாயகி ப்ரீத்தி அஸ்ரானி நடித்துள்ளார். படத்தை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரித்துள்ளார்.

இந்த படத்திற்கு ஹாரிஸ் ஒளிப்பதிவு செய்ய படத்தை ஆர்சி பிரணவ் கவனிக்கிறார். படத்தின் இசையை ஜான்மார்ட்டின் மேற்கொள்கிறார். இந்த படமானது ஒரு ரோம் – காம் கதை அம்சத்தில் உருவாகி இருக்கிறது. இதனை அடுத்து இந்த படத்தின் டீசர் இன்று வெளியாகும் என்று படக்குழு  அறிவித்திருந்த நிலையில் தற்போது டீசர் வெளியாகி வரவேற்பு பெற்று வருகிறது.