சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் காதலர் தினத்தை முன்னிட்டு ஒரு பேக்கரி கடை சிறப்பு சலுகைகளை அறிவித்தது. உலகம் முழுவதும் நேற்று காதலர் தினம் கொண்டாடப்பட்ட நிலையில் காதலர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக அந்த பேக்கரி நிறுவனம் சிறப்பு விளம்பரம் செய்திருந்தது.

இதற்கு அந்த பகுதியைச் சேர்ந்த இந்து முன்னணி அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதன் பிறகு அவர்கள் தாலி கயிறோடு அந்த பேக்கரி கடைக்கு வந்தனர். அதாவது அந்த பேக்கரிக்கு வரும் காதல் ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைப்போம் என்று கூறி அவர்கள் தாலி கயிறோடு வந்த நிலையில் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

அவர்கள் திடீரென அங்கு போராட்டமும் நடத்தினர். இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் தற்போது இந்து முன்னணியினர் 5 பேரை கைது செய்துள்ளனர். அதன்படி கார்த்திகேயன், தினேஷ் ராஜா, மாரியப்பன், சுரேஷ் மற்றும் அக்னி பாலா ஆகிய 5 பேரை கைது செய்துள்ளனர்.