உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் அல்தாப் என்ற 30 வயது வாலிபர். இவர் மகராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தானே மாவட்டத்தில் கடந்த 15 வருடங்களாக டெய்லராக இருந்துள்ளார். இவர் உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில் திடீரென கடந்த மாதம் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் அல்தாப்பிடம் பேசுவதை காதலி தவிர்த்தார். இந்நிலையில் கடந்த மாதம் 23ஆம் தேதி தன்னுடைய வீட்டில் இருந்தபடி காதலிக்கு அல்தாப் வீடியோ கால் செய்தார். அவர் வீடியோ காலில் பேசியவாறு விஷம் குடித்ததோடு தன்னுடைய கையையும் அறுத்துக் கொண்டார்.

இதனை வீடியோவாக பதிவு செய்து அவர் தன் காதலிக்கு அனுப்பினார். இதில் அல்தாப் உயிரிழந்த நிலையில் அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் படி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் தற்போது அவர் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது. இது பற்றி உயிரிழந்த வாலிபரின் சகோதரி ரேஷ்மா கூறும் போது அந்த இளம் பெண் தன் சகோதரனிடம் 2 லட்ச ரூபாய் பணம் கேட்டு மிரட்டியதாக கூறியுள்ளார். மேலும் அந்த இளம் பெண் மீது ரேஷ்மா காவல் நிலையத்திலும் புகார் கொடுத்த நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.