
ஆந்திர மாநிலம் ஏலூரு – சத்திரம்பாடு பகுதியை சேர்ந்த யுவதி என்ற இளம் பெண். இந்த பெண்ணை அந்த பகுதியைச் சேர்ந்த ஏசுரத்தினம் என்பவர் ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் இன்று சாலையில் சென்று கொண்டிருந்த அந்த பெண்ணிடம் தன்னை காதலிக்குமாறு ஏசுரத்தினம் கேட்டிருக்கிறார்.
அதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் யுவதியை கழுத்தை அறுத்து கொலை செய்தார். பின்னர் அவரும் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். இதனையடுத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த காவல் துறையினர் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.