
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கலசப்பாக்கம் பகுதியில் வேல்முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரோஷ்னி என்ற 21 வயது மகள் இருந்துள்ளார். இவர் காலேஜ் படிப்பை முடித்த நிலையில் போலீஸ் வேலையில் சேர்வதற்காக முயற்சி செய்து கொண்டிருந்தார். இவர் இதற்காக ஒரு பயிற்சி மையத்தில் படித்து வந்த நிலையில் அதே பயிற்சி மையத்தில் சக்திவேல் என்ற 29 வயது வாலிபரும் படித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் நட்பாக பழகி வந்த நிலையில் நேற்று முன்தினம் வழக்கமாக பயிற்சி முடிந்த பிறகு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென இருவருக்கும் இடையே ஏதோ வாக்குவாதம் ஏற்பட கோபத்தில் ரோஷ்னியை அடித்து சக்திவேல் ஒரு கிணற்றில் தள்ளி விட்டு கொலை செய்தார்.
பின்னர் சக்திவேல் தானாகவே சென்று காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் தெரியவந்தது. அதாவது ரோஷ்னியும் சக்திவேலும் காதலித்து வந்த நிலையில் ரோஷ்னிக்கு வீட்டில் பெற்றோர் வரன் பார்த்துள்ளனர். இதன் காரணமாக சக்தி வேலை தவிர்த்து விட்டு ரோஷினி வீட்டில் பார்த்த மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள்ள தயாராகியுள்ளார். இதனால் சக்திவேல் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி ரோஷ்னியை வற்புறுத்தியுள்ளார். ஆனால் ரோஷினி மறுப்பு தெரிவிக்கவே ஆத்திரத்தில் கொலை செய்துள்ளார். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சக்திவேலை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.