
சீனாவை சேர்ந்த ஒரு வாலிபர் காதலியின் விருப்பத்திற்காக செயற்கையான பிரசவ வலியை அனுபவித்துள்ளார். அப்போது வலியை தாங்க முடியாமல் அந்த வாலிபர் கதறி அழுதார். மேலும் அவரது உடல் நலம் மோசமாகி சிறுகுடலின் ஒரு பகுதியை நீக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
திருமணத்திற்கு பின் பெண்கள் அனுபவிக்கும் வலிகளை உணர்த்துவதற்காக காதலியின் தாயும், சகோதரியும் இணைந்து அந்த சோதனையை செய்யுமாறு வாலிபரிடம் கூறியுள்ளனர். இதனால் வாலிபர் வலியால் அவதிபட்டுள்ளார். இந்த செயலால் காதலர்களின் திருமணம் ரத்தானது. மேலும் காதலி மீது புகார் அளிக்கவும் வாலிபர் முன்வந்துள்ளார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.