அமெரிக்க நாட்டில் உள்ள அர்கன்சாசில் ஏடிபி சேலஞ்சர்ஸ் டென்னிஸ் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியின் ஜப்பான் நாட்டை சேர்ந்த யுடா ஷிமிசு மற்றும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெர்னார்ட் டொமிக் ஆகியோர்கள் மோதினர். இந்த போட்டியின் போது டொமிக் தனக்கு உடல்நிலை சரி இல்லை என்று கூறியதோடு மருத்துவர்களின் உதவியை நாடினார். ஆனால் அப்போது மைதானத்தில் மருத்துவர்கள் யாரும் இல்லாததால் அவரை விளையாடுமாறு போட்டி நடுவர் கூறினார்.

இந்த போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த ஜப்பான் வீரர் முதல் செட்டை 6-க்கு 1 என்ற அடிப்படையில் கைப்பற்றினார். இந்த போட்டியில் இரண்டாவது செட்டில் 5 புள்ளிகளை மட்டும் பெற்ற டொமிக் திடீரென போட்டியிலிருந்து வெளியேறுவதாக கூறினார். அவர் தன்னுடைய உடல்நிலை தொடர்ந்து மோசமாவதால் தன்னால் விளையாட முடியாது என்று கூறி வெளியேறினார். மேலும் இந்த போட்டியை பார்க்க அவருடைய காதலி வந்த நிலையில் இருவருக்கும் இடையே மைதானத்தில் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.