ஐபிஎல் கிரிக்கெட் மூலம் இந்திய அணியில் இடம்பெற்ற வெங்கடேஷ் ஐயர் கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பெற்று சிறப்பாக விளையாடினார். இந்த நிலையில் வெங்கடேஷ் ஐயருக்கும் அவருடைய காதலை ஸ்ருதி ரங்கநாதனுக்கும் இன்று திருமணம் நடந்து முடிந்துள்ளது.

இது தொடர்பான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள வெங்கடேஷ் ஐயர், என் வாழ்க்கையில் அடுத்த அத்தியாயம் என்று குறிப்பிட்டுள்ளார். இவர்களுடைய திருமணத்தில் பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தினர் என பலரும் கலந்து கொண்ட நிலையில் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.