உத்திரப் பிரதேச மாநிலத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக திருமணத்திற்கு சற்று நேரத்திற்கு முன்பாக அழகு நிலையத்தில் இருந்த மணப்பெண்ணை அவரது முன்னாள் காதலன் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றம் சாட்டப்பட்ட தீபக் என்பவரை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில், தீபக் மத்திய பிரதேசத்தில் உள்ள ஒரு லாட்ஜில் தங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. பின்னர், அங்கு சென்ற போலீசார், அவரது அறையின் கதவை உடைத்து உள்ளே பார்த்தபோது, தீபக் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.