
பழங்காலத்தில் ‘பச்சை குத்துதல்’ என்று சொல்லப்பட்ட ஒரு கலை, இன்று நவீன வளர்ச்சியின்மூலம் ‘டாட்டூ’ என்ற பெயரில் இளைய தலைமுறையினரை ஆட்கொண்டு வருகிறது. அந்த வகையில், நபர் ஒருவர் தனது கீழ் உதட்டில் காதலியின் பெயரை டாட்டூவால் போட்டு இணையத்தில் கவனம் பெற்றுள்ளார்.
அந்த நபர், தன் காதலியின் பெயரான “அம்ருதா’”என்பதை டாட்டூவாகப் போட்டுள்ளார். இந்த வீடியோதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை, டாட்டூ ஆர்ட்டிஸ்ட் அபிஷேக் சப்கல் என்பவர், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதுதான் தற்போது வைரலாகி வருகிறது.
View this post on Instagram