கோவை மாவட்டம் செல்வபுரத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் கோவை சொக்கம்புதூரை சேர்ந்த வாலிபர் ஒருவரை ஆறு வருடமாக காதலித்து வந்துள்ளார். அவருடன் நெருக்கமாக பழகியதால் அந்த பெண் மூன்று மாதம் கர்ப்பமானார். இதனைத் தொடர்ந்து திருமணம் செய்து கொள்ள அவரிடம் கூறிய நிலையில் காதலனின் பெற்றோர் கர்ப்பத்தை கலைத்தால் மகனை திருமணம் செய்து தருவதாக இளம் பெண்ணிடம் கூறியுள்ளனர்.

அதனை நம்பி அந்தப் பெண்ணும் கர்ப்பத்தை கலைத்த நிலையில் திருமணம் செய்து கொடுக்கவில்லை. இந்த நிலையில் பெற்றோர் வேறு ஒரு பெண்ணுடன் அவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். இதனால் நொறுங்கிப் போன அந்த இளம் பெண்ணுக்கு காதலுக்கு ஒருத்தி கல்யாணத்திற்கு வேறு ஒருத்தி என்ற கதையாய் வாழ்க்கை அமைந்தது. இதனைத் தொடர்ந்து அந்தப் பெண் கண்ணீர் மல்க ஆட்சியர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். இதனை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.