
பொதுவாக காதலுக்கு கண்கள் கிடையாது என்றும் காதலுக்கு வயது வித்தியாசம் தேவையில்லை என்றும் கூறப்படுவது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் சீனாவிலும் அப்படி ஒரு காதல் சம்பவம் நடந்துள்ளது. அந்த விசித்திரமான காதல் கடைசியில் திருமணத்திற்கு வழிவகுத்துள்ளது.
சீனாவின் பிரான்ஸ் நாட்டில் ஹேபாய் நகரில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் வசித்து வரும் 80 வயது முதியவர் லியு. இவரும் அங்கு பணிபுரியும் ஜியா சாங்ஸ் என்ற 23 வயது பெண்ணும் காதலித்துள்ளனர். முதலில் லியு தான் ஜியாவை காதலிப்பதாக கூறியுள்ளார். இதனை அடுத்து அந்த பெண் அவருடைய காதலை ஏற்றுக் கொண்டுள்ளார். இவர்களுடைய திருமணத்திற்கு குடும்பத்தினர் சம்மதிக்கவில்லை என்று கூறப்படுகிறது.