தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம் பிடிக்கும் அளவுக்கு வளர்ந்திருப்பவர் தான் நடிகை ரெஜினா. இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான கேடி பில்லா கில்லாடி ரங்கா என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு ராஜதந்திரம் மற்றும் மாநகர உள்ளிட்ட படங்களில் நடித்த இவர் இறுதியாக அஜித்தின் விடாமுயற்சி திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து பல திரைப்படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வரும் இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் காதல் குறித்து மனம் திறந்து பேசி உள்ளார்.

அதில், நான் முதலில் ஒருவரை காதலித்தேன். அவருக்கு தற்போது திருமணம் ஆகிவிட்டது. மற்றவர்களைப் போல எனக்கும் முதல் காதல் ரொம்ப ஸ்பெஷல்தான். எனக்கும் வயித்துக்குள்ள இருந்து பட்டாம்பூச்சி பறக்குற மாதிரி பீலிங்ஸ் எல்லாம் இருந்தது. முதல் காதல் ரொம்பவே க்யூட்டாக இருந்தது. அதெல்லாம் என்னைக்குமே மறக்க முடியாது. இருந்தாலும் காதலிக்கும் போது பாதுகாப்பு என்பது ரொம்ப முக்கியம். காதலுக்கு கண்ணில்லை என்று அனைவரும் சொல்வார்கள். ஆனால் அப்படி கிடையாது. காதலிக்கும் போது உங்க மனசும் மைண்டும் என்ன சொல்லுதோ அதைக் கேட்டு ஒரு தெளிவான முடிவு எடுத்துக்கோங்க என்று ரெஜினா அட்வைஸ் வழங்கியுள்ளார்.