
கர்நாடகாவின் ஹுப்பள்ளியில் 20 வயது பெண் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது .
அஞ்சலி அம்பிகேரா என்ற பெண் தூங்கிக் கொண்டிருந்தபோது புதன்கிழமை அதிகாலை இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட, கிரிஷ் சாவந்த், 23, என்ற நபர் அவரது அறைக்குள் நுழைந்து, அவரை கொடூரமாக தாக்கியுள்ளார்.
பாதிக்கப்பட்டவரின் சகோதரியின் கூற்றுப்படி, கொலையாளி ஏற்கனவே தன் காதலை ஏற்காவிட்டால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியதும்
“கிரிஷ் தனது சகோதரி அஞ்சலியை சில காலமாக துன்புறுத்தி வந்ததாகவும் தனது காதலை தொடர்ந்து வெளிப்படுத்திய போதிலும் , என் சகோதரி அதை மறுத்துவிட்டார் எனன்தெரிவித்துள்ளார்.
அதேபோல் மிரட்டல்கள் குறித்து போலீசாருக்கு தகவல் அளித்தும் நடவடிக்கை இல்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார். “அவர்கள் அதை தீவிரமாக தொடரவில்லை, இன்று பாருங்கள், என் சகோதரி இறந்துவிட்டார்,” என்று அவர் வேதனையுடன் தெரிவித்தார்.
இந்நிலையில் அஞ்சலியின் குடும்பத்தினர் மற்றும் கோபமடைந்த உள்ளூர்வாசிகள் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி ஹூப்பள்ளியில் போராட்டம் நடத்தினர். முறையாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்ததையடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர்.