பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் திஷா பதானி. இவர் தமிழ் சினிமாவில் சூர்யா நடிக்கும் கங்குவா திரைப்படத்தின் மூலம் அறிமுகமாக இருக்கிறார். இவர் எம்எஸ் தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். இவர் தற்போது நடிகர் பிரபாஸ் நடிப்பில் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள கல்கி ஏடி 2898 என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இந்த படம் ரிலீஸ் ஆகி வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது. அதோடு வசூலிலும் பட்டையை கிளப்பி வருகிறது. இந்நிலையில் நடிகர் பிரபாஸ் மற்றும் திஷா பதானி ஆகியோர் காதலிப்பதுதாக தற்போது தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. இதை உறுதிப்படுத்தும் விதமாக நடிகை திஷா பதானி தன்னுடைய கையில் PD என்ற பச்சை குத்தியுள்ளார். இது தொடர்பான புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இருப்பினும் சில ரசிகர்கள் திஷா பதானி என்ற பெயரை தான் PD என்று பச்சை குத்தியுள்ளதாக கூறுகிறார்கள். மேலும் இது தொடர்பாக அவர்கள் கூறினால்தான் உண்மை என்னவென தெரியவரும்.