
விழுப்புரம் மாவட்டத்திலுள்ள சிறுவந்தாடு பகுதியில் சங்கர் கணேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கோமலா என்ற பெண்ணை காதலித்து வந்த நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் கோமலா கோபித்துக் கொண்டு பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.
இதனால் வீட்டில் இருந்த சங்கர் மிகுந்த மனவேதனையில் தற்கொலை செய்து கொண்டார். அவர் இறப்பதற்கு முன்பாக நண்பர்களுக்கு ஒரு வீடியோ அனுப்பியுள்ளார். அதில் குடும்ப வாழ்க்கை மிகவும் கஷ்டமாக இருப்பதாலும் காதல் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியே இல்லை என்பதாலும் தற்கொலை செய்து கொள்வதாக கூறியுள்ளார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வளவனூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.