கோவை மாவட்டத்தில் வடக்கலூர் என்ற கிராமம் உள்ளது. அங்கு ஒரே சமுதாயத்தை சேர்ந்த 300 குடும்பங்கள் ஒரே கிராமத்தில் வசித்து வருகிறார்கள். இவர்கள் பெற்றோருக்கு தெரியாமல் காதல், சாதி மறுப்பு திருமணம் செய்தால் அவர்களை ஊரை விட்டு ஒதுக்கி வைப்பது வழக்கம். இதுகுறித்து அந்த கிராமத்தைச் சேர்ந்த சுந்தரம் என்பவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார் .

அதில் எங்களுடைய கிராமத்தில் காதல் திருமணம் செய்தால் கோயிலுக்குள் அனுமதி இல்லை. நல்லது, கெட்டது உள்ளிட்ட குடும்ப சடங்குகளில் பங்கேற்பதற்கும் தடை. இதனை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இதனை அடுத்து இந்த விவகாரத்தில் அதிகாரிகள் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது. அதன்படி கோவை வடக்கு ஆர்டிஓ கோவிந்தன் விசாரணை நடத்துவதாக இருந்த நிலையில் விசாரணை வருகிற சனிக்கிழமை தள்ளி வைத்துள்ளனர்.

தற்போது இதுகுறித்து பேசியுள்ள வடக்கலூர் கிராம மக்கள், எங்கள் கிராமத்தில் இந்த முறை காலம் காலமாக தொடர்கிறது. சுந்தரம் என்பவர் கோயில் நிர்வாக பொறுப்பில் இருந்தார். அதற்கு முன்பாக காதல் திருமணம் செய்தால் கோயில் அவர்களை கோவிலுக்குள் அனுமதிக்காமல் பஞ்சாயத்து செய்து பணம் எல்லாமே வசூலிப்பது இவர்தான் செய்து கொண்டிருந்தார். அதுவே அவருடைய மகள் காதல் திருமணம் செய்த போது அந்த முறையை பின்பற்றவில்லை. ஊருக்கு ஒரு சட்டம் இவருக்கு ஒரு சட்டமா என்று கேள்வி எழுப்பியதால் தான் அதை மறைப்பதற்கு சுந்தரம் இந்த பிரச்சினை கையில் எடுத்துள்ளார் என்று குற்றம் சாட்டியிருக்கிறார்கள்.