அலகாபாத் உயர் நீதிமன்றம் ஆனது மேஜரான இரண்டு பேர் தாங்கள் விருப்பும் நபரை திருமணம் செய்வதை யாராலும் தடுக்க முடியாது என்று தீர்ப்பின் மூலமாக தெளிவுபடுத்தி உள்ளது. அதாவது காதல் திருமணம் செய்த வழக்கில் கணவர் மீது மனைவியின் உறவினர்கள் தொடர்ந்த கடத்தல் வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

மேலும் அந்த குடும்ப உறுப்பினர்களிடமிருந்து பெண்ணிற்கு பாதுகாப்பு வழங்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தின் 21 வது பிரிவின் கீழ் வாழ்வதற்கும் தனிப்பட்ட சுதந்திரத்திற்கும் உரிமை உள்ளன என்று உயர்நீதிமன்றம் விளக்கி உள்ளது.