விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே 13 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் தற்போது தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதாவது 13 வயது சிறுமிக்கு சரவணன் தொடர்ந்து காதல் தொல்லை கொடுத்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாணவியை சரவணன் வழிமறித்து தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தியுள்ளார்.

இதனால் அந்த மாணவி மிகுந்த மனவேதனையில் இருந்த நிலையில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாரின் படி சரவணன் மற்றும் அவருடைய சகோதரி சங்கீதா ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதில் சரவணன் மீது போக்சோ உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகி கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.