
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் காது கேளாதவர்களுக்கான ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடர் நடத்தப்பட்டது. இந்த தொடரின் இறுதிப் போட்டியில் பிரான்சை சேர்ந்த ஆலிவர் கிரேவ் என்பவர் தமிழ்நாட்டை சேர்ந்த பிரித்வி சேகர் என்பவருடன் மோதினார்.
இந்த போட்டியில் 6-3 மற்றும் 6-1 என்ற நேர் செட் கணக்கில் தமிழக வீரர் பிரித்வி சேகர் ஆலிவர் கிரேவை வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து பிரித்வி சேகர் இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.