மக்களவைத் தேர்தலும், விக்கிரவாண்டி இடைத்தேர்தலும் ஓயட்டும் என்று காத்திருந்து தமிழக மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் பேரதிர்ச்சியை கொடுத்து இருக்கிறார் என்று எதிர் கட்சி தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். தேர்தலுக்கும் முன்பு மின்கட்டணம் உயர்வு பற்றி செய்தி வெளியாக இருந்தது.

ஆனால் அதற்கு மின்வாரியம் மறுப்பு தெரிவித்தது. இந்நிலையில் தற்போது மின் கட்டண உயர்வை இரவோடு இரவாக தமிழக அரசு அறிவித்து மக்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது. இதனால் தேர்தல் முடிந்த கையோடு பெரிய பரிசை கொடுத்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.