தமிழகத்தில் கீழ் ஜாதி என்பதற்காக அரசு அலுவலகங்களில் சக ஊழியர்கள் அவமதிக்கப்படும் சம்பவங்கள் தொடர்பான செய்திகள் ஏற்கனவே வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில் மீண்டும் அதே போன்றே ஒரு சம்பவம் இன்று நடந்துள்ளது. அதாவது இன்று தமிழகத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராமசபை கூட்டங்கள் நடந்தது. அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆனாங்கூர் என்ற பகுதியிலும் கிராமசபை கூட்டம் நடைபெற்ற நிலையில் பஞ்சாயத்து தலைவியான சங்கீதா என்பவர் கூட்டத்தை புறக்கணித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

அதாவது சங்கீதா இருளர் சமுதாயத்தை சேர்ந்தவர். இதன் காரணமாக அவரை நாற்காலியில் அமர விடாமலும் கோப்புகளில் கையெழுத்து போட விடாமலும் ஜாதி ரீதியாக ஆதிக்க கும்பல் அவமரியாதை செய்துள்ளது. மேலும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கையில் கண்டன பலகையுடன் தர்ணா போராட்டத்தில் சங்கீதா ஈடுபட்டார். மேலும் இந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது