தமிழகத்தில் பல்வேறு விதமான காபி பொடிகள் சந்தையில் விற்பனைக்கு உள்ளன. அதில் லியோ காபி மற்றும் எவரெஸ்ட் காபி பொடிகள் மிகவும் பிரபலமானவை. இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் 26 ஆம் தேதி உணவு பாதுகாப்பு அதிகாரிகள் லியோ மற்றும் எவரெஸ்ட் காபித்தூள் தயாரிப்பு நிறுவனத்தில் ஆய்வு செய்தது மட்டுமல்லாமல் காபி மாதிரிகளையும் ஆய்வு செய்தனர். சாதாரணமாக காபி பொடிகளில் காப்பர் சல்பைடு என்ற வேதியியல் பொருள் 30 மில்லி கிராம் வரை இருக்க வேண்டும்.

ஆனால் பரிசோதிக்கப்பட்ட காபி கொடியில் இதே 46.18 கிராமமாக உள்ளது எனவும் இது மனித உடலில் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள லியோ மற்றும் எவரெஸ்ட் காபி நிறுவனங்கள், சேர்க்கையாக காபி பொடிகளில் வேதியியல் பொருட்களை சேர்க்க வேண்டிய அவசியமே இல்லை என்று கூறியுள்ளன. இந்த சம்பவம் காபி பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.