![](https://www.seithisolai.com/wp-content/uploads/2024/06/24-667ca568daf62.-.jpeg)
பிரபல காமெடி நடிகர் ஆன வெங்கல் ராவ் உடல்நல பிரச்சினையின் காரணமாக ஆந்திராவில் அவருடைய சொந்த ஊரில் சிகிச்சை பெற்று வருகிறார். சிகிச்சைக்கு கூட பணமில்லாமல் கஷ்டப்பட்டு வருவதாகவும் கைகால் செயலிழந்து விட்டது என்றும் சில நாட்களுக்கு முன்பாக உதவி கேட்டு வீடியோ வெளியிட்டு இருந்தார்.
இதனை தொடர்ந்து முதல் ஆளாக சிம்பு அவருக்கு இரண்டு லட்சம் ரூபாய் கொடுத்து உதவி செய்துள்ளார். இதனை தொடர்ந்து விஜய் டிவி பிரபலம் KPY பாலாவும் பணம் அனுப்பி இருக்கிறார். தான் ஒரு லட்சம் ரூபாய் அவருக்கு கொடுத்திருப்பதாகவும் நீங்களும் உதவுங்கள் என்று பாலா வீடியோ வெளியிட்டுள்ளார்.